ஊராட்சி மன்ற கூட்டமைப்பு தலைவராக கண்ணகி பிரசன்னா தேர்வு
உளுந்தூர்பேட்டையில் ஊராட்சி மன்ற கூட்டமைப்பு தலைவராக கண்ணகி பிரசன்னா தேர்வு செய்யப்பட்டார்.
உளுந்தூர்பேட்டை,
உளுந்தூர்பேட்டை ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள், கூட்டமைப்பு நிர்வாகிகள் தேர்வு உளுந்தூர்பேட்டையில் நடைபெற்றது. இதற்கு மணிக்கண்ணன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். ஒன்றியக்குழு தலைவர் ராஜவேல், ஒன்றிய செயலாளரும், நகராட்சி துணை தலைவருமான வைத்தியநாதன், நகராட்சி தலைவர் திருநாவுக்கரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் உளுந்தூர்பேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 40-க்கும் மேற்பட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் புல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் கண்ணகி பிரசன்னா ஜெயராமன் ஊராட்சி மன்ற தலைவர்களின் கூட்டமைப்பு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். செயலாளராக குஞ்சரம் ஊராட்சி மன்ற தலைவர் உமா மகேஸ்வரி பாலாஜி மற்றும் பொருளாளராக திருப்பெயர் ஊராட்சி மன்ற தலைவர் கருணாநிதி ஆகியோரும் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர். இதேபோல துணை தலைவர்களாக ஊராட்சி மன்ற தலைவர்கள் புகைப்பட்டி அங்கமுத்து, பெருங்குருக்கை பாலகிருஷ்ணன், குன்னத்தூர் சிவா, துணை செயலாளர்களாக பு.மலையனூர் பாலு, வீரமங்கலம் நசீம் காத்து, எஸ்.மலையனூர் ராமசாமி ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டனர் செயற்குழு உறுப்பினர்களாக மூலசமுத்திரம் மகாலட்சுமி, மழவராயனூர் சுபா, பின்னல்வாடி மணி, எலவனாசூர்கோட்டை நந்தகுமார், பல்லவாடி கோவிந்தன், நொனையவாடி ஜெயந்தி, பாலி சவுந்தரபாண்டியன், தானம் அனிதா, குமாரமங்கலம் அமுதா ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டனர். தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகளுக்கு மணிக்கண்ணன் எம்.எல்.ஏ. உள்பட பலர் வாழ்த்து தெரிவி்த்தனர்.