மணல்மேடு
மணல்மேட்டை அடுத்த பாலாகுடி கிராமத்தில் சாராயம் விற்பனை நடைபெறுவதாக மணல்மேடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து மணல்மேடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேல்முருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த ஒரு முதியவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் பன்னீர்வெளி பகுதியை சேர்ந்த மணி (வயது 60) என்பதும், சாராயம் விற்றதும் தெரியவந்தது. இதுகுறித்து மணல்மேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து மணியை கைது செய்து, அவரிடமிருந்து 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.