மணல் கடத்திய டிராக்டர் பறிமுதல்

மணல் கடத்திய டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டது

Update: 2022-04-02 17:35 GMT
மணல்மேடு
மணல்மேட்டை அடுத்த சீபுலியூர் கொள்ளிடக்கரையில் இருந்து மணல் கடத்தப்படுவதாக மணல்மேடு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த டிராக்டர் டிரைவர் போலீசாரை கண்டதும் டிராக்டரை அங்கேயே நிறுத்திவிட்டு தப்பி ஓடி விட்டார். அதனைத்தொடர்ந்து டிராக்டரில் போலீசார் சோதனையிட்டதில் அதில்  மணல் கடத்தி வந்தது தெரிய வந்தது. அதன்பேரில், டிராக்டரை போலீசார் பறிமுதல் செய்தனர். தப்பி ஓடிய டிரைவர் சீபுலியூர் குடியானத் தெருவை சேர்ந்த சக்திவேல் மகன் அரவிந்தன் என்பவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்