2½ டன் ரேஷன் அரிசி கடத்தல்; 5 பேர் கைது
விளாத்திகுளம் அருகே லோடு ஆட்டோவில் 2½ டன் ரேஷன் அரிசி கடத்தியதாக 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
எட்டயபுரம்:
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள மாவிலோடை கிராமத்தில் ரேஷன் அரிசி வாங்கி கடத்தப்படுவதாக காடல்குடி போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் செல்லத்துரை தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்று சோதனை நடத்தினர். அப்போது ஒரு லோடு ஆட்டோவில் ரேஷன் அரிசி வாங்கி கடத்தி வந்தது தெரியவந்தது.
இதையடுத்து ரேஷன் அரிசி கடத்தியதாக ராமநாதபுரம் மாவட்டம் கொக்காடி கிராமத்தை சேர்ந்த வேல்சாமி மகன் தர்மலிங்கம், பெரிய கருப்பசாமி மகன் ரங்கசாமி, சாயல்குடி பகுதியை சேர்ந்த முருகன் மகன் சரவணன், கமுதி பகுதியை சேர்ந்த காசி மகன் மணிகண்டன், மதுரை அவனியாபுரம் பகுதியை சேர்ந்த சண்முகையா மகன் போஸ் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2½ டன் ரேஷன் அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய லோடு ஆட்டோ ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.