கஞ்சா வைத்திருந்த 2 பேர் கைது

ரிஷிவந்தியம் அருகே கஞ்சா வைத்திருந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-04-02 16:51 GMT
ரிஷிவந்தியம், 

ரிஷிவந்தியம் அடுத்த காட்டுஎடையார் ஆஞ்சநேயர் கோவில் அருகே கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து ரிஷிவந்தியம் சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் மற்றும் போலீசார் அப்பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் நின்றிருந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர் திருக்கோவிலூர் அருகே மொகலார் கிராமத்தை சேர்ந்த சுபாஷ் (வயது 24)  என்பதும், கஞ்சா வைத்திருந்ததும் தெரிந்தது. மேலும் அவர் அளித்த தகவலின் பேரில் பாவந்தூர் காட்டுக்கொட்டாயை சேர்ந்த சுரேஷ் (36) என்பவரின் வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர். இதில் சுரேஷ் தனது வீட்டில் கஞ்சாவை பதுக்கி வைத்திருந்தது தெரிந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்