ஓடையில் தவறி விழுந்து தொழிலாளி பலி
ஓடையில் தவறி விழுந்து தொழிலாளி பலியானார்.;
ஓசூர்:
பேரிகை அருகே கே.என்.தொட்டியை சேர்ந்தவர் கிருஷ்ணப்பா (வயது 62). தொழிலாளி. இவர் கே.என்.தொட்டி சாலையில் இருந்து கர்நாடக எல்லைக்கு நேற்று முன்தினம் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் ஓடையில் தவறி விழுந்தார். இதில் பலத்த காயம் அடைந்த கிருஷ்ணப்பா இறந்தார். இது குறித்து பேரிகை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.