மாப்பிள்ளை வீரன், திருமேனி அம்மன் கோவில் திருவிழா

தகட்டூர் மாப்பிள்ளை வீரன், திருமேனி அம்மன் கோவில் திருவிழா நடந்தது.

Update: 2022-04-02 16:32 GMT
வாய்மேடு:
வாய்மேட்டை அடுத்த தகட்டூர் மாப்பிள்ளை வீரன், திருமேனி அம்மன் கோவிலில் பங்குனி திருவிழா கடந்த 22-ந் தேதி தொடங்கியது.விழா நாட்களில் சாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை மற்றும் வீதி உலா நடைபெற்று வருகிறது. நேற்று தகட்டூர் பைரவர் கோவில் மண்டகப்படியை முன்னிட்டு சுவாமிக்கு பால், பன்னீர், சந்தனம், நெய், திருநீறு, தேன், இளநீர் உள்ளிட்டவைகளால் அபிஷேகம் செய்யப்பட்டு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் சாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி வீதிஉலா நடந்தது. இதில் கோவில் செயல் அலுவலர் கணேஷ்குமார், எழுத்தர் கார்த்தி உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான வாழைப்பழம் வீசும் நிகழ்ச்சி வருகிற 5-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. 6-ந் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது .

மேலும் செய்திகள்