தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு வருவாய்த்துறை நேரடி நியமன அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு வருவாய்த்துறை நேரடி நியமன அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-04-02 16:32 GMT
தர்மபுரி:
தமிழ்நாடு வருவாய்துறை குரூப்-2 நேரடி நியமன அலுவலர் சங்கத்தின் சார்பில் தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாவட்ட தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார். செயலாளர் சிவன், பொருளாளர் சசிகுமார், தாசில்தார்கள் அருண்பிரசாத், சுகுமார், ராஜா, சதாசிவம் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள்.
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். ஈட்டிய விடுப்பு ரத்து, அகவிலைப்படி உயர்வு நிலுவை ஆகியவற்றை மீண்டும் வழங்க வேண்டும். அனைத்து மாவட்டங்களிலும் துணை தாசில்தார் தற்காலிக பதவி உயர்வு பட்டியலை வெளியிட்டு தகுதியான நபர்களுக்கு துணை தாசில்தார் பதவி உயர்வு வழங்க வேண்டும். உதவி கலெக்டர் அலுவலகங்களில் துணை தாசில்தார் நிலையில் தலைமை உதவியாளர் பணியிடத்தை ஏற்படுத்த வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் வருவாய்த்துறை நேரடி நியமன அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்