தெலுங்கானா மாநிலத்தில் இருந்து தர்மபுாிக்கு சரக்கு ரெயிலில் 1325 டன் யூரியா வந்தது

தெலுங்கானா மாநிலத்தில் இருந்து தர்மபுாிக்கு சரக்கு ரெயிலில் 1,325 டன் யூரியா வந்தது.

Update: 2022-04-02 16:32 GMT
தர்மபுரி:
தெலுங்கானா மாநிலம் கங்காவரம் துறைமுகத்தில் இருந்து, சரக்கு ரெயில் மூலம் தர்மபுரிக்கு 1325 மெட்ரிக் டன் யூரியா உரம் வந்தது. இதுகுறித்து வேளாண்மை இணை இயக்குனர் வசந்தரேகா கூறியதாவது:-
தர்மபுரிக்கு சரக்கு ரெயில் மூலம் வந்த யூரியா உரத்தில் தர்மபுரி மாவட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களுக்கு 516 டன், உரக்கடைகளுக்கு 107 டன், கிருஷ்ணகிரி மாவட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களுக்கு 240 டன், உரக்கடைகளுக்கு 462 டன் பிரித்து அனுப்பப்படுகிறது. லாரிகள் மூலம் இந்த உரங்களை அனுப்பும் பணி வேளாண் தரக்கட்டுப்பாட்டு உதவி இயக்குனர் தாம்சன் மேற்பார்வையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. விவசாயிகள் தங்கள் ஆதார் எண்ணை பயன்படுத்தி விற்பனை முனைய கருவி மூலம் அரசு நிர்ணயித்த விலையில் யூரியா உரத்தை பெற்று பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்