அழுகிய நிலையில் ஆண் பிணம் மீட்பு

பொள்ளாச்சி அருகே அழுகிய நிலையில் ஆண் பிணம் மீட்கப்பட்டது. அவர் தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;

Update: 2022-04-02 16:32 GMT
பொள்ளாச்சி

பொள்ளாச்சி அருகே அழுகிய நிலையில் ஆண் பிணம் மீட்கப்பட்டது. அவர் தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூக்கில் ஆண் பிணம்

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே பாலமநல்லூரில் உள்ள ஒரு தனியார் தோட்டத்தில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் ஆண் பிணம் கிடப்பதாக தாலுகா போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் அங்கு போலீசார் விரைந்து சென்று பார்வையிட்டனர். அப்போது தூக்கில் அழுகிய நிலையில் ஆண் பிணம் தொங்குவது தெரியவந்தது. மேலும் அதன் தலை மரத்தில் தொங்கிய நிலையிலும், உடல் தரையில் விழுந்த நிலையிலும் கிடந்தது.

தற்கொலையா?

இதையடுத்து போலீசார் பிணத்தை மீட்டு விசாரணை நடத்தினர். அதில் பிணமாக கிடந்த நபர், அதே பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி வீரமுத்து(வயது 27) என்பது தெரியவந்தது. அவர் இறந்து 3 நாட்களுக்கு மேல் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆனால் அவர் மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டு தூக்கில் தொங்க விடப்பட்டாரா? என்பது தெரியவில்லை. அதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்