குட்கா விற்ற பெண் பிடிபட்டார்
ஊத்தங்கரை அருகே குட்கா விற்ற பெண் பிடிபட்டார்.
ஊத்தங்கரை:
ஊத்தங்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி மற்றும் போலீசார் காரப்பட்டு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது காரப்பட்டு மெயின் ரோட்டில் ஒரு மளிகை கடையில் குட்கா விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த மளிகை கடையில் இருந்து ஒரு கிலோ குட்காவை பறிமுதல் செய்த போலீசார், அதை விற்ற கல்பனா (வயது 37) என்பவரை கைது செய்தனர்.