பள்ளி மாணவன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மோதி பெண் பலி

பள்ளி மாணவன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மோதி பெண் பலியானார்.

Update: 2022-04-02 16:32 GMT
பர்கூர்:
பர்கூர் அருகே உள்ள மரிமானப்பள்ளியை சேர்ந்தவர் பாலன். இவருடைய மனைவி மாதம்மாள் (வயது 48). அதே பகுதியை சேர்ந்தவர் தேவராஜ் மனைவி மாதம்மாள் (60). இவர்கள் 2 பேரும் பர்கூர் சென்று விட்டு மீண்டும் மரிமானப்பள்ளிக்கு மொபட்டில் திரும்பி கொண்டிருந்தனர். மொபட்டை பாலன் மனைவி மாதம்மாள் ஓட்டினார். சீமனூர் கூட்ரோடு பகுதியில் சென்றபோது, எதிரே தனியார் பள்ளி மாணவர்கள் வந்த மோட்டார் சைக்கிள் மொபட் மீது மோதியது. இதில் பாலன் மனைவி மாதம்மாள் சம்பவ இடத்திலேயே பலியானார். தேவராஜ் மனைவி மாதம்மாள் மற்றும் பள்ளி மாணவர்கள் 2 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து கந்திகுப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பர்கூர் அருகே பள்ளி மாணவன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மோதி பெண் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்