தர்மபுரியில் டாக்டர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம்

தர்மபுரியில் டாக்டர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-04-02 16:31 GMT
தர்மபுரி:
இந்திய மருத்துவ சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று நாடு தழுவிய போராட்டம் நடந்தது. இதன் ஒரு பகுதியாக தர்மபுரியில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய மருத்துவ சங்கத்தை சேர்ந்த சரவணன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள். டாக்டர்களுக்கு எதிரான வன்முறையை தடுக்க மத்திய அரசு சட்டம் இயற்றவேண்டும். நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் மற்றும் அதிக இழப்பீடுகள் கேட்கும் வழக்குகளில் இருந்து மருத்துவத்துறைக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்பவை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் டாக்டர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி பங்கேற்றனர்.

மேலும் செய்திகள்