தினத்தந்தி புகார் பெட்டி
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள குறைகள் புகார் பெட்டியில் கூறப்பட்டுள்ளது.
பன்றிகள் தொல்லை
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூர் ஊராட்சிக்கு உட்பட்ட அபிஷேகக்கட்டளை தெரு உள்ளது. அந்த தெருவில் ஏராளமான பன்றிகள் கூட்டம் கூட்டமாக சுற்றி திரிகின்றன. இதனால் இந்த பகுதியில் குடியிருக்கும் மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். மேலும் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளதால் பொதுமக்கள் மற்றும் மாணவ மாணவிகள் நலன் கருதி பன்றிகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
-ராஜேந்திரன், அபிஷேகக்கட்டளை.