காரில் கடத்திய 2,000 மதுபாட்டில்கள் பறிமுதல்

காரைக்காலில் இருந்து சீர்காழிக்கு காரில் கடத்திய 2,000 மதுப்பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக வாலிபர் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-04-02 16:26 GMT
சீர்காழி;
காரைக்காலில் இருந்து சீர்காழிக்கு காரில் கடத்திய 2,000 மதுப்பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக வாலிபர் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
வாகன சோதனை
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி தென்பாதியில் சீர்காழி போலீஸ் ஏட்டு தமிழ்ஒளி வாகன சோதனையில் ஈடுபட்டார்.. அப்போது காரைக்காலில் இருந்து சீர்காழி நோக்கி வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தார். அதில், சாக்கு மூட்டைகள் இருந்தன. இந்த மூட்டைகளை பிரித்து பார்த்தபோது 180 மில்லி அளவுள்ள 2 ஆயிரம் மதுபாட்டில்கள் இருந்தன.இதனைத்தொடர்ந்து காரில் வந்த நபரிடம் விசாரணை நடத்தியபோது அவர், மயிலாடுதுறை தூக்கணாம்குளம் பகுதியை சேர்ந்த பாஸ்கர் மகன் செந்தில்குமார் (வயது 25) என்பதும், இவர் காரைக்காலில் இருந்து சீர்காழி பகுதிக்கு மதுபாட்டில்களை காரில் கடத்தி சென்றதும் தெரிய வந்தது.
மதுபாட்டில்கள் பறிமுதல்
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து செந்தில்குாமரை கைது செய்தனர். 
மேலும் அவரிடம் இருந்து 2,000 மதுப்பாட்டில்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் பறிமுதல் செய்யப்பட்டது. 

மேலும் செய்திகள்