ஆழியூர் அரசு பள்ளியில் ஊட்டச்சத்து வார விழா

ஆழியூர் அரசு பள்ளியில் ஊட்டச்சத்து வாரவிழா நடந்தது.

Update: 2022-04-02 16:25 GMT
நாகப்பட்டினம்:
நாகை அருகே ஆழியூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித்திட்டம் சார்பில் ஊட்டச்சத்து வார விழா நடைபெற்றது-. விழாவுக்கு பள்ளி தலைமையாசிரியர் நீலமேகம் தலைமை தாங்கினார். வட்டார குழந்தை வளர்ச்சித்திட்ட அலுவலர் செல்வமணி முன்னிலை வகித்தார். தேமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார  நிலைய டாக்டர் பிரியதர்ஷினி கலந்துகொண்டு ஊட்டசத்து குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
தொடர்ந்து 50-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு ரத்த சோகை குறித்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டன. பின்னர் பாரம்பரிய உணவு பொருள் கண்காட்சி நடந்தது. இதில் பள்ளி வளர்ச்சிக்குழு உறுப்பினர் ராஜேந்திரன், ஊராட்சி மன்ற துணை தலைவர் செய்யது இதயதுல்லா, குழந்தை வளர்ச்சி திட்ட மேற்பார்வையாளர்கள் மேரிபால், செல்வராணி, வட்டார ஒருங்கிணைப்பாளர் முத்தழகன் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் சத்துணவு அமைப்பாளர் பரிமளா நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்