தூக்குப்போட்டு என்ஜினீயர் தற்கொலை

நாகையில் தொழில் தொடங்க முடியாததால் மன உளைச்சலில் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2022-04-02 16:24 GMT
நாகப்பட்டினம்:
நாகையில் தொழில் தொடங்க முடியாததால் மன உளைச்சலில் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
என்ஜினீயர்
நாகை வெளிப்பாளையம் சிவன்தெற்கு வீதியைச் சேர்ந்தவர் சங்கர். இவரது மகன் சசிசுந்தர்( வயது 34). என்ஜினீயர்.  இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. 
இவர் தொழில் தொடங்க முயற்சி செய்து வந்தார். ஆனால் தொழில்  தொடங்க முடியாததால்  மன உளைச்சலில் இருந்து வந்தார்.
தூக்குப்போட்டு தற்கொலை
இந்த நிலையில் சசிசுந்தர் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத போது தூக்குப்போட்டு கொண்டார். இதை பார்த்த உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அப்போது அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், சசிசுந்தர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
போலீசார் விசாரணை
இதுகுறித்து தகவல் அறிந்த வெளிப்பாளையம் போலீசார் அங்கு வந்து சசிசுந்தர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுதொடர்பான புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
---
.

மேலும் செய்திகள்