பள்ளிபாளையம் காவிரி ஆற்றில் அலசுவதற்காக சாய துணிகளுடன் வந்த லாரி பறிமுதல் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் நடவடிக்கை
பள்ளிபாளையம் காவிரி ஆற்றில் அலசுவதற்காக சாய துணிகளுடன் வந்த லாரி பறிமுதல் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் நடவடிக்கை
பள்ளிபாளையம்:
பள்ளிபாளையம் காவிரி ஆற்றின் கரையோர பகுதியில் ஏராளமான சாயப்பட்டறைகள் உள்ளன. மேலும் சுற்றுவட்டார பகுதி, ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சாயம் ஏற்றிய துணிகளை அலசுவதற்காக சமயசங்கிலி பகுதி காவிரி ஆற்றுக்கு துணிகளை கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று குமாரபாளையம் தாசில்தார் தமிழரசி மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் அந்த பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது காவிரி ஆற்றில் துணிகளை அலச நின்று கொண்டிருந்த டெம்போ லாரியில் சாய துணிகள் அதிகளவில் இருந்தன. பின்னர் அதிகாரிகளை கண்டதும் டிரைவர் மற்றும் உடன் வந்தவர்கள் ஓடி விட்டனர். இதையடுத்து துணிகளுடன் டெம்போ லாரியை பறிமுதல் செய்த அதிகாரிகள் அதனை பள்ளிபாளையம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.