பழனிசெட்டிபட்டியில் பல்துறை பணி விளக்க கண்காட்சி நிறைவு விழா

பழனிசெட்டிபட்டியில் பல்துறை பணி விளக்க கண்காட்சி நிறைவு விழா நடந்தது.

Update: 2022-04-02 16:12 GMT
தேனி:
தேனியை அடுத்த பழனிசெட்டிபட்டியில் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் ‘75-வது சுதந்திர திருநாள் அமுத பெருவிழா' கொண்டாடுவதன் ஒரு அங்கமாக பல்துறை பணி விளக்க கண்காட்சி கடந்த 27-ந்தேதி தொடங்கியது. இதன் நிறைவு விழா நேற்று நடந்தது. விழாவுக்கு மாவட்ட கலெக்டர் முரளிதரன் தலைமை தாங்கி பல்வேறு கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார். விழாவில் கிராமிய கலைநிகழ்ச்சிகள் நடந்தன. இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே, மாவட்ட வருவாய் அலுவலர் சுப்பிரமணியன், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சண்முகசுந்தரம், பழனிசெட்டிபட்டி பேரூராட்சி தலைவர் மிதுன் சக்கரவர்த்தி, துணைத்தலைவர் மணிமாறன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்