மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலி

நாகர்கோவிலில் மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலியானார்

Update: 2022-04-02 15:40 GMT
நாகர்கோவில்:
நாகர்கோவிலில் மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலியானார்
நாகர்கோவில் அருகே சுண்டபற்றிவிளையை சேர்ந்தவர் சதீஷ் (வயது 35). இவர்  இரவு மோட்டார் சைக்கிளில் நாகர்கோவிலுக்கு வந்து கொண்டிருந்தார். மேல ராமன்புதூர் சானல்கரை பாலத்தில் வந்தபோது எதிரே மற்றொரு மோட்டார் சைக்கிள் வந்தது. அப்போது எதிர்பாராத விதமாக சதீஷ் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளும், மற்றொரு மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இந்த விபத்தில் சதீசும், மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்தவரும் படுகாயம் அடைந்தனர். இதைத் தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு இரண்டு பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சை பலனின்றி மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்தவர் பரிதாபமாக இறந்தார். இதைத் தொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக பிணவறைக்கு கொண்டு செல்லப்பட்டது. ஆனால் விபத்தில் இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விவரம் தெரியவில்லை. அவருக்கு சுமார் 65 வயது இருக்கும். லுங்கியும், வெள்ளை சட்டையும் அணிந்திருந்ததாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. சதீசுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இது தொடர்பாக கோட்டார் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
---

மேலும் செய்திகள்