தனிநபர் உறிஞ்சி குழி அமைக்க தொண்டமானூர் ஊராட்சி தேர்வு
தண்டராம்பட்டு ஒன்றியத்தில் தனிநபர் உறிஞ்சி குழி அமைக்க தொண்டமானூர் ஊராட்சி தேர்வு செய்யப்பட்டுள்ளது.
தண்டராம்பட்டு
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு ஒன்றியம் தொண்டமானூர், தனிநபர் உறிஞ்சி குழி அமைப்பதற்காக முன்மாதிரி ஊராட்சியாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
அந்த ஊராட்சியில் உள்ள ஒவ்வொரு வீடாக சென்று வீட்டில் பயன்படுத்தப்படும் பொருட்களை கழுவுவதன் மூலம் வெளியேற்றப்படும் கழிவு நீரை சேமிப்பதற்காக அந்த ஊராட்சியில் 358 வீடுகளை தேர்வு செய்து, அந்த வீடுகளில் தனிநபர் உறிஞ்சி குழி அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
அந்தப் பணியை வட்டார வளர்ச்சி அலுவலர் மகாதேவன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின்போது ஊராட்சி மன்ற தலைவர் செல்வி தேவேந்திரன், துணைத் தலைவர் கோவிந்தம்மாள் விஜயராஜ், பணித்தள பொறுப்பாளர்கள், பணி மேற்பார்வையாளர் தங்கதுரை, ஊராட்சி செயலாளர் முனுசாமி ஆகியோர் உடன் இருந்தனர்.