நாமக்கல் அரசு பெண்கள் கல்லூரியில் மதுவின் தீமைகள் குறித்த விழிப்புணர்வு போட்டிகள்

நாமக்கல் அரசு பெண்கள் கல்லூரியில் மதுவின் தீமைகள் குறித்த விழிப்புணர்வு போட்டிகள்

Update: 2022-04-02 14:27 GMT
நாமக்கல்:
நாமக்கல் பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் மதுவினால் ஏற்படும் தீமைகள் குறித்து வருவாய்த்துறை சார்பில் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு மாணவ, மாணவிகள் மூலம் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு பெண்கள் கல்லூரியில் வருவாய்த்துறை சார்பில் மதுவினால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதையொட்டி கல்லூரி மாணவிகளுக்கு இடையே பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டி மற்றும் ஓவியப்போட்டி நடத்தப்பட்டது. இதில் மாணவிகள் பலர் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். அதைத்தொடர்ந்து பரிசளிப்பு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தாசில்தார் திருமுருகன் தலைமை தாங்கினார். கல்லூரியின் முதல்வர் (பொறுப்பு) பாரதி முன்னிலை வகித்தார். போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு தாசில்தார் திருமுருகன் பரிசு வழங்கி பாராட்டினார். கல்லூரி ரெட்கிராஸ் ஒருங்கிணைப்பாளர் புவனேஸ்வரி, மண்டல துணை தாசில்தார் ஞானராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

மேலும் செய்திகள்