இந்திய மருத்துவ சங்க அலுவலக வளாகத்தில் டாக்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
இந்திய மருத்துவ சங்க அலுவலக வளாகத்தில் டாக்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்;
கோவை
இந்திய மருத்துவ சங்கம் சார்பில் அவசரம் இல்லாத மருத்துவ பணிகளை நிறுத்திவிட்டு நேற்று காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை டாக்டர்கள் கோவையில் சிரியன் சர்ச் வீதியில் உள்ள இந்திய மருத்துவ சங்க அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கு மாநில தலைவர் டாக்டர் பழனிசாமி தலைமை தாங்கினார்.
அப்போது டாக்டர்கள் கூறுகையில், ராஜஸ்தான் மாநிலத்தில் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பெண்ணிற்கு பிரசவத்திற்கு பின் அதிக ரத்தபோக்கு ஏற்பட்டது.
டாக்டர் எவ்வளவோ போராடியும் பெண்ணின் உயிரைக் காப்பற்ற முடிய வில்லை.
இறந்த பெண்ணின் உறவினர்கள் போராட்டம் நடத்தியதால் போலீசார், சிகிச்சை அளித்த பெண் டாக்டர் மீது கொலை வழக்கு பதிவு செய்தனர்.
இதனால் மனஉளைச்சல் அடைந்த டாக்டர் அர்ச்சனா தற்கொலை செய்து கொண்டார்.
மருத்துவர்கள் மீது வழக்கு பதிவு செய்யும் போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து உச்சநீதிமன்றம் ஏற்கனவே தெளிவாக அறிவுறுத்தி உள்ளது.
அதை கருத்தில் கொள்ளாமல் டாக்டர் மீது தவறான வழக்கு பதிவு செய்த போலீஸ் அதிகாரிகளை கைது செய்ய வேண்டும்.
இறந்த டாக்டரின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும். டாக்டர்க ளை குற்றவாளிகளாக பதிவு செய்யும் இந்திய தண்டனை சட்டத்தின் பிரிவுகளை மாற்ற வேண்டும் என்றனர்.