போலீஸ் நிலையத்துக்கு வருபவர்களுக்கு நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு போலீஸ் டிஜிபி சைலேந்திரபாபு அறிவுரை வழங்கினார்
போலீஸ் நிலையத்துக்கு வருபவர்களுக்கு நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு போலீஸ் டிஜிபி சைலேந்திரபாபு அறிவுரை வழங்கினார்
கோவை
போலீஸ் நிலையத்துக்கு வருபவர்களுக்கு நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு அறிவுரை வழங்கினார்.
போலீஸ் டி.ஜி.பி. ஆலோசனை
தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு நேற்று கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்தார்.
அங்கு அவர், கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு மாவட்ட போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதையடுத்து டி.ஜி.பி. சைலேந்திரபாபு பேசியதாவது
தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு, குற்றத்தடுப்பு நடவடிக்கைகளில் அனைவரும் தீவிர கவனம் செலுத்த வேண்டும்.
சாத்தான்குளம் போன்ற சம்பவங்கள் இனியும் ஏற்பட கூடாது. நாமக்கல் பகுதி யில் மாற்றுத்திறனாளி போலீசாரால் தாக்கப்பட்ட சம்பவம் வருத்தம் அளிக்கிறது.
போலீஸ் நிலையத்துக்கு வரும் பொது மக்களை இனிதாக வரவேற்க வேண்டும்.
வரவேற்பு பிரிவில் உள்ள போலீசாரே புகார் தரும் பொது மக்களிடம் ஆரம்ப கட்ட விசாரணை நடத்தலாம்.
பொதுமக்க ளுக்கு நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். பொதுமக்களிடம் போலீசார் முரட்டுத்தனமாக நடந்துகொள்ளக்கூடாது.
நீதி கிடைக்க வேண்டும்
போலீஸ் நிலையத்துக்கு சென்றால் தங்களது பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் என்று நம்பி வருகிறார்கள்.
அவர்களுக்கு நீதி கிடைக்க போலீஸ் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தற்போது சைபர் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. பணத்தை இழக்கும் பொதுமக்கள் 1930 என்ற எண்ணுக்கு 24 மணி நேரத்துக் குள் போன் செய்து விவரங்களை தெரிவித்தால், பணம் மோசடி ஆசாமிகளுக்கு சென்றடையாமல் மீட்க முடியும்.
இது தொடர் பாக போலீசார் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
போதை பொருள் பறிமுதல்
ஆபரேஷன் 2.0 என்ற திட்டத்தின்படி கஞ்சா விற்பனை செய்யும் நபர்கள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு வருகிறார்கள்.
குட்கா போன்ற போதை பொருட்கள் அறவே ஒழிக்கப்பட வேண்டும். போதைக்கு அடிமையானவர்களை உரிய ஆலோசகரிடம் அனுப்பி வைத்து அந்த பழக்கத்தில் இருந்து மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கடந்த 28-ந்தேதி முதல் 1-ந்தேதி வரை தமிழ்நாடு முழுவதும் போதை பொருட்கள் விற்றதாக 3187 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
அவர்களிடம் இருந்து சுமார் ரூ.1.77 கோடி மதிப்புள்ள போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. 102 வாகனங்க ளும் கைப்பற்றப்பட்டு உள்ளது.
முக்கிய கடமை
சப்-இன்ஸ்பெக்டர்கள், வாட்ஸ்- அப் குழு மூலம் அந்தந்த பகுதி மக்களை ஒன்றிணைத்து தகவல்களை சேகரிப்பது, விபத்துகளை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது,
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுப்பது ஆகியவை முக்கியமான கடமையாகும்.
மேலும் அதிகாரிகள் போலீசாரின் குறைகளை கேட்டறிந்து உடனுக்குடன் நிவர்த்தி செய்ய வேண்டும்.
போலீசாருக்கு சுழற்சி முறையில் வாரவிடுமுறை வழங்க போலீஸ் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பாராட்டு சான்றிதழ்
கூட்டத்தில், சிறப்பாக துப்புதுலக்கி குற்றவாளிகளை கைது செய்த காட்டூர் குற்றப்பிரிவு, சரவணம்பட்டி குற்றப்பிரிவு, வடவள்ளி, சூலூர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர்கள் மற்றும் '
தனிப்படையினர், திருப்பூர், நீலகிரி, ஈரோடு மாவட்ட போலீசாருக்கு பண வெகுமதியுடன் பாராட்டு சான்றிதழ்களை டி.ஜி.பி. சைலேந்திரபாபு வழங்கினார்.
கூட்டத்தில் மேற்கு மண்டல ஐ.ஜி.சுதாகர், திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.ஜி.பாபு, டி.ஐ.ஜி. முத்துசாமி, போலீஸ் சூப்பிரண்டுகள் பத்ரி நாராயணன், சசிமோகன், அசிஸ் ராவத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.