காதலனுடன் பேச முடியாத விரக்தியில், நீட் தேர்வு பயிற்சி மைய விடுதியில் மாணவி தற்கொலை செய்து கொண்டார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
காதலனுடன் பேச முடியாத விரக்தியில், நீட் தேர்வு பயிற்சி மைய விடுதியில் மாணவி தற்கொலை செய்து கொண்டார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
சரவணம்பட்டி
காதலனுடன் பேச முடியாத விரக்தியில், நீட் தேர்வு பயிற்சி மைய விடுதியில் மாணவி தற்கொலை செய்து கொண்டார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது
நீட் தேர்வு பயிற்சி மையம்
கோவையை அடுத்த எஸ்.எஸ்.குளம் ஒன்றியம் கொண்டையம் பாளையத்தில் வாரி மெடிக்கல் அகாடமி என்ற பயிற்சி மையம் உள்ளது.
இங்கு மருத்துவ படிப்பில் சேருவதற்கான நீட் தேர்வுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.
இந்த மையத்தில் கோவை சீரநாயக்கன் பாளையத்தை சேர்ந்த பெருமாள் என்பவரின் மகள் ஸ்வேதா (வயது18) சேர்ந்தார்.
அவர், அந்த பயிற்சி மையத்தில் உள்ள விடுதியில் தங்கி படித்து வந்தார். அதே பயிற்சி மைய விடுதியில் மதுரை மாவட்டம் பி.பி.குளத்தை சேர்ந்த சிவகுமார் என்பவரது மகன் யோகேஸ்வரனும் (18) தங்கி படித்து வந்தார்.
காதலுக்கு எதிர்ப்பு
இதனால் அவர்கள் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அது காதலாக மாறியது.
இதைத்தொடர்ந்து அவர்கள் 2 பேரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகி றது. இவர்களது காதல் விவகாரம் இரு வீட்டாருக்கும் தெரிய வந்தது.
இதில் யோகேஸ்வரனின் பெற்றோர் சாதியை காரணம் காட்டி காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஆனாலும் அவர்களது காதல் தொடர்ந்தது. இதனால் யோகேஸ்வரனின் பெற்றோர், கோவை கொண்டையம்பாளையத்தில் உள்ள பயிற்சி மையத்துக்கு வந்து தங்களின் மகனை மதுரைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
தற்கொலை
அதன்பிறகு யோகேஸ்வரனிடம் பேச முடியாமல் ஸ்வேதா தவித்து வந்தார். இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த ஸ்வேதா பயிற்சி மைய விடுதி அறையில் மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதை பார்த்து விடுதி மாணவிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்த தகவலின் பேரில் கோவில்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஸ்வேதாவின் உடலை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காதலனுடன் பேச முடியாத விரக்தியில், மாணவி தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.