படப்பை அருகே வாலிபர் கொலை வழக்கில் 5 பேர் கைது - தனிப்படை போலீசார் அதிரடி

படப்பை அருகே வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-04-02 08:43 GMT
படப்பை,

காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை அடுத்த மணிமங்கலம் எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் வசித்து வந்தவர் தேவா என்கிற தேவேந்திரன் (வயது 23). இவர் நேற்று முன்தினம் வீட்டின் மாடியில் மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த தேவேந்திரனின் உறவினர்கள் மணிமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இந்த கொலை குறித்து போலீஸ் உதவி கமிஷனர் ரவி மேற்பார்வையில் மணிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சோமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகலிங்கம் தலைமையில் 2 தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்த நிலையில் வண்டலூர்-மீஞ்சூர் வெளிவட்ட சாலை மண்ணிவாக்கம் அருகே கொலையாளிகள் பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே சம்பவ இடத்துக்கு விரைந்த தனிப்படை போலீசார் 5 பேரை மடக்கி பிடித்தனர். விசாரணையில் 5 பேரும் குற்றவாளிகள் என தெரியவந்தது.

இந்த வழக்கில் பெருமாள் கோவில் தெரு பகுதியை சேர்ந்த விக்னேஷ் (23), எம்.ஜி.ஆர். நகர் குளக்கரை பகுதியை சேர்ந்த சுரேந்தர் (20), கருணீகர் தெருவை சேர்ந்த சதீஷ் (20), குளக்கரை தெருவை சேர்ந்த சுதாகர் (21), பில் சாவடி தெருவை சேர்ந்த ரைசுல் இஸ்லாமுல் அன்சாரி (22) ஆகிய 5 பேரும் கைது செய்யப்பட்டனர்.

இவர்களிடம் இருந்து கத்தி, இரும்பு ராடு உள்ளிட்டவைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்