பாம்பு கடித்அது இளம்பெண் சாவு

கும்மிடிப்பூண்டி அருகே பாம்பு கடித்து இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.

Update: 2022-04-02 07:17 GMT
கும்மிடிப்பூண்டி,  

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த கவரைப்பேட்டை அருகே உள்ளது சோம்பட்டு கிராமம். இங்கு வசித்து வரும் ரவிச்சந்திரன் என்பவரின் மகள் வைதேகி (வயது 24). இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. கடந்த 28-ந்தேதி வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தபோது, இளம்பெண் வைதேகியை விஷபாம்பு ஒன்று கடித்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து உறவினர்கள் அவரை சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி வைதேகி நேற்று முன்தினம் இரவு பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணி தலைமையில் கவரைப்பேட்டை சப்-இன்ஸ்பெக்டர் தீபன்ராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

மேலும் செய்திகள்