சிவகிரியில் ரூ.1 கோடிக்கு எள் ஏலம்
சிவகிரியில் ரூ.1 கோடிக்கு எள் ஏலம் போனது.;
சிவகிரி
சிவகிரி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் எள் ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத்துக்கு சிவகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் 1,086 மூட்டைகளில் எள்ளை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர்.
இதில் கருப்பு எள் கிலோ ஒன்று குறைந்தபட்ச விலையாக 100 ரூபாய் 59 காசுக்கும், அதிகபட்ச விலையாக 140 ரூபாய் 72 காசுக்கும், சிவப்பு எள் குறைந்தபட்ச விலையாக 105 ரூபாய் 59 காசுக்கும், அதிகபட்ச விலையாக 131 ரூபாய் 77 காசுக்கும், வெள்ளை எள் குறைந்தபட்ச விலையாக 123 ரூபாய் 72 காசுக்கும், அதிகபட்ச விலையாக 128 ரூபாய் 72 காசுக்கும் விற்பனை ஆனது. எள் மொத்தம் ரூ.1 கோடியே 4 லட்சத்து 19 ஆயிரத்து 976-க்கு ஏலம் போனது.