பூச்சி மருந்து குடித்து முதியவர் தற்கொலை

பூச்சி மருந்து குடித்த முதியவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.;

Update: 2022-04-01 21:03 GMT
அன்னவாசல், 
அன்னவாசல் அருகே உள்ள சுந்தரப்பட்டியை சேர்ந்தவர் சுப்பையா (வயது 70), விவசாயி. இவர்  சர்க்கரை நோயினால் அவதிப்பட்டு வந்த நிலையில் அறுவை சிகிச்சை மூலம் ஒரு காலை எடுத்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் வாழ்க்கையில் வெறுப்பு அடைந்த அவர் வயலுக்கு அடிக்கும் பூச்சி மருந்தை குடித்து மயங்கினார். இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை அப்பகுதி மக்கள் மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சுப்பையா பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து அன்னவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்