ஆற்றூர் பேரூராட்சியில் கடைகளில் பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்

ஆற்றூர் பேரூராட்சியில் கடைகளில் பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்

Update: 2022-04-01 20:40 GMT
திருவட்டார், 
குமரி மாவட்டத்தில் தடை செய்யபட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தும் வணிக நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட கலெக்டர் அரவிந்த்  உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து ஆற்றூர் பேரூராட்சி செயல் அலுவலர் மகேஷ்வரன் தலைமையில் பேரூராட்சி பணியாளர்கள் பேரூராட்சிக்கு உள்பட்ட ஆற்றூர் சந்திப்பு, புளியமூடு, கல்லுப்பாலம், தேமானூர் உள்ளிட்ட பகுதிகளில் செயல்படும், பேக்கறிகள், மளிகைகடைகள், மீன்கடைகள், காய்கறிகடைகளில் பிளாஸ்டிக் சோதனை நடத்தினர். அப்போது தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்யப்பட்டு  அவற்றை பயன்படுத்திய வணிக நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இவ்வாறு ரூ.2 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது. மேலும் தடை செய்யபட்ட பிளாஸ்டிக் பொருட்களை தொடர்ந்து பயன்படுத்தினால் வணிக நிறுவனங்கள் ‘சீல்’ வைக்கப்படும் என்று செயல் அலுவலர் மகேஷ்வரன் எச்சரிக்கை விடுத்தார்.

மேலும் செய்திகள்