மோட்டார் சைக்கிளை வழிமறித்து விவசாயிக்கு கத்திக்குத்து

மோட்டார் சைக்கிளை வழிமறித்து விவசாயியை மர்ம நபர்கள் கத்தியால் குத்தினர்.;

Update: 2022-04-01 20:16 GMT
மீன்சுருட்டி:
அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள தென்னவநல்லூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 48). விவசாயி. இவர் சொந்த வேலையாக வடவார் தலைப்புக்கு சென்றுவிட்டு மீண்டும் தனது வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். தென்னவநல்லூர் ஓடை மதகு அருகே வந்தபோது அவருக்கு பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள், அவரை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளனர். மேலும் மோட்டார் சைக்கிைள வழிமறித்து, கையில் வைத்திருந்த கத்தியால் அவரை குத்தி கொலை மிரட்டல் விடுத்து சென்றதாக தெரிகிறது. இதுகுறித்து ரமேஷ் கொடுத்த புகாரின்பேரில் மீன்சுருட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தமிழரசன் வழக்குப்பதிவு செய்து, ரமேசை கத்தியால் குத்தியது வழிப்பறியில் ஈடுபடுபவர்களா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்