மனைவி, மாமியாரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக வாலிபர் கைது
மனைவி, மாமியாரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக வாலிபர் கைது செய்யப்பட்டார்.
ஜெயங்கொண்டம்:
ஜெயங்கொண்டம் அருகே உள்ள உத்திரக்குடி கிராமத்தை சேர்ந்தவர் இளவரசன். இவரது மகன் கலையரசன்(வயது 24). இவர், யுவராணி(20) என்பவரை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு வயதில் பெண் குழந்தை உள்ளது. கலையரசன் பொக்லைன் எந்திர டிரைவராக வேலை பார்த்து வருகிறார். குடும்ப பிரச்சினை காரணமாக குஞ்சிதபாதபுரத்தில் உள்ள தனது பாட்டி வீட்டில் யுவராணி தங்கி இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிைலயில் அங்கு வந்த கலையரசன், தன்னை திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாகவும், அதனை தடுக்க வந்த தனது தாயையும், பாட்டியையும் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததோடு, தனது செல்போனையும், வீட்டில் இருந்த பிளாஸ்டிக் நாற்காலிகளையும் உடைத்து சேதப்படுத்தியதாக யுவராணி ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோவன் வழக்குப்பதிவு செய்து கலையரசனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.