தி.மு.க. பேச்சாளர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பா.ஜ.க.வினர் மனு

தி.மு.க. பேச்சாளர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பா.ஜ.க.வினர் மனு கொடுத்தனர்.

Update: 2022-04-01 20:11 GMT
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்ட பா.ஜ.க. தலைவர் செல்வராஜ் தலைமையில், அக்கட்சியினர் நேற்று போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒரு புகார் மனு கொடுத்தனர். அதில், தி.மு.க. பேச்சாளரான சிவாஜி கிருஷ்ணமூர்த்தி என்பவர், தி.மு.க.வினர் நடத்தும் பொதுக்கூட்டங்களில் பிரதமர் மோடியையும், பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலையையும், மேலும் அவரது தாயாரையும் மிகவும் அநாகரிகமான தகாத வார்த்தைகளால் பேசி வருகிறார். மேலும் அவர் இந்திய காவல்துறையையும் தவறாக பேசியுள்ளார். தற்போது அவர் பேசிய வீடியோ காட்சிகள் தமிழகத்தில் கலவரம் தூண்டும் விதமாக சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. எனவே கிருஷ்ணமூர்த்தி மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தனர். மேலும் பா.ஜ.க.வினர் இந்த புகார் மனுவை தமிழக முதல்-அமைச்சருக்கும், கவர்னருக்கும், போலீஸ் டி.ஜி.பி.க்கும் அனுப்பியுள்ளனர்.

மேலும் செய்திகள்