திருட்டு வழக்கில் தலைமறைவாக இருந்த 4 பேர் கைது

திருட்டு வழக்கில் தலைமறைவாக இருந்த 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-04-01 20:10 GMT
கூடங்குளம்:

கூடங்குளம் அருகே உள்ள செட்டிகுளத்தை சேர்ந்த ராமலிங்கம் மகன் பொன்முருகன் (வயது 31), குருசாமி மகன் பாபு (37), கணேசன் மகன் மனிஷ்குமார், தனசேகரன் மகன் சசிகுமார். இவர்கள் மீது பல்வேறு திருட்டு வழக்குகள் உள்ள நிலையில் 4 பேரும் பெங்களூருவில் தலைமறைவாக இருந்தனர். இவர்களை கூடங்குளம் போலீசார் தேடி வந்தனர்.

இந்தநிலையில் 4 பேரும் சொந்த ஊருக்கு வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் இன்ஸ்பெக்டர் ஜான் பிரிட்டோ தலைமையில் போலீசார் செட்டிகுளத்துக்கு சென்றனர். அங்கு ஊருக்கு வந்த 4 பேரையும் மடக்கி பிடித்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 4 பவுன் நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்