கார் தீப்பிடித்து எரிந்து நாசம்
பழவூர் அருகே நான்கு வழிச்சாலையில் கார் தீப்பிடித்து எரிந்து நாசமானது.
வடக்கன்குளம்:
நெல்லை மாவட்டம் வடக்கன்குளம் பழவூர் அருகே உள்ள ஆவரைகுளத்தைச் சேர்ந்தவர் செல்வகுமார். இவர் நேற்று மதியம் வீட்டில் இருந்து தனது காருக்கு பெட்ரோல் போடுவதற்காக அம்பலவாணபுரத்தில் உள்ள பெட்ரோல் பங்க்கிற்கு சென்று கொண்டிருந்தார்.
நான்கு வழி சாலையில் சென்றபோது திடீரென காரின் முன் பக்கம் தீப்பிடித்து எரிந்தது. உடனே சுதாரித்துக்கொண்ட செல்வகுமார், காரில் இருந்து வெளியே இறங்கி ஓடினார். சிறிது நேரத்தில் கார் மளமளவென தீப்பிடித்து எரிந்து நாசமானது. இதுகுறித்த தகவலின் பேரில் வள்ளியூர் தீயணைப்பு படையினர் வந்து தீயை அணைத்தனர். கார் தீப்பிடித்து எரியும் காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.