கஞ்சா வியாபாரி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
27 வழக்குகளில் தொடர்புடைய கஞ்சா வியாபாரி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.;
திருச்சி, ஏப்.2-
27 வழக்குகளில் தொடர்புடைய கஞ்சா வியாபாரி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
கஞ்சா வேட்டை
தமிழகம் முழுவதும் கஞ்சா விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கடந்த மாதம் 28-ந் தேதி முதல் வருகிற 27-ந் தேதி வரை ஒரு மாதம் ‘ஆபரேசன் கஞ்சாவேட்டை 2.0 ’- திட்டத்தை டி.ஜி.பி.சைலேந்திரபாபு அறிவித்தார்.
அதன்படி, திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன், மாநகரில் கஞ்சா விற்பனையில் ஈடுபடும் குற்றவாளிகளை கண்டறிந்து அவர்களை கைது செய்ய போலீஸ் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி இருந்தார். திருச்சி மாநகரத்தில் கடந்த 28-ந் தேதி முதல் நடத்தப்பட்ட கஞ்சா வேட்டையில் எடமலைப்பட்டிப்புதூர், கே.கே.நகர், காந்திமார்க்கெட், பாலக்கரை, கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்தவர்களை கண்டறிந்து 9 வழக்குகளில் 12 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.64 ஆயிரத்து 500 மதிப்புள்ள 6 கிலோ 450 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
குண்டர் சட்டம் பாய்ந்தது
இந்த நிலையில் கிராப்பட்டி அன்புநகர் ரெயில்வே பாலம் அருகில் இளைஞர்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக குமார் என்ற வெள்ளலிகுமார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
கைதான வெள்ளலிகுமார் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் 27 வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவருகிறது. எனவே, அவர் தொடர்ந்து குற்றம் செய்யும் எண்ணம் உள்ளவர் என்பதால், அவரை ஓராண்டு ஜாமீனில் வெளிவரமுடியாத வகையில் குண்டர் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்க எடமலைப்பட்டிபுதூர் போலீசார், மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயனுக்கு பரிந்துரை செய்தனர். அதை அவர் ஏற்று, வெள்ளலிகுமாரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க நேற்று உத்தரவிட்டார்.