போர்வெல் வாகன உரிமையாளர்கள் போராட்டம்
டீசல் விலை உயர்வை கண்டித்து போர்வெல் உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அருப்புக்கோட்டை,
அருப்புக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் 80-க்கும் மேற்பட்ட போர்வெல் வாகனங்கள் இயங்கிவருகின்றன. டீசலை அதிக அளவு நம்பியுள்ள இந்த தொழில் தற்போது டீசல் விலை உயர்வால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அருப்புக்கோட்டை அருகே காந்திநகரில் டீசல் மற்றும் பி.வி.சி. பைப் உள்ளிட்ட மூலப்பொருட்கள் விலை உயர்வால் போர்வெல் தொழிலை நம்பியுள்ள குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளதாக கூறி மாவட்ட போர்வெல் வாகன உரிமையாளர் சங்கத்தினர் 3 நாள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் வாகன உரிமையாளர் சங்க மாவட்ட துணைத்தலைவர் கலைமகள். ஜெயராமன் கலந்து ெகாண்டு பேசினார். இதில் போர்வெல் வாகன உரிமையாளர் சங்க மாவட்ட செயலாளர் சுரேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.