பெண்ணுக்கு அரிவாள் வெட்டு; வாலிபர் கைது

தேவகோட்டையில் பெண்ணை அரிவாளால் வெட்டிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.;

Update: 2022-04-01 19:51 GMT
காரைக்குடி, 

தேவகோட்டை அருணகிரிபட்டிணம் தெற்குத்தெருவைச் சேர்ந்த முருகேசன் மனைவி சரஸ்வதி (வயது 50). இதேபோல் அருணகிரிபட்டிணம் அக்ரஹார தெருவைச் சேர்ந்த சரவணன் மகன்  சதீஷ்குமார் (28). கட்டிட தொழிலாளி. இருவருக்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கல் இருந்ததாக தெரிகிறது. இந்நிலையில் தான் கொடுத்த பணத்தை சரஸ்வதி சதீஷ்குமாரிடம் அடிக்கடி கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. சம்பவத்தன்று அருணகிரிபட்டிணம் பகுதியில் உள்ள ஆதிமுத்துமாரியம்மன் கோவில் கும்மியடி திருவிழாவை காண சரஸ்வதி. தனது பேரனுடன் சென்றுள்ளார்.அங்கு 2 நபர்களுடன் வந்த சதீஷ்குமார் சரஸ்வதியிடம் தகராறு செய்து மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து சரஸ்வதியை வெட்டி உள்ளார். இதில் சரஸ்வதியின் தலை, முகம் உள்ளிட்ட பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு அவரை சிகிச்சைக்காக தேவகோட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து தேவகோட்டை நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன், சப்இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து சதீஷ்குமாரை கைது செய்தனர். மேலும்  2 பேரை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்