சிறப்பு மருத்துவ முகாம்
வெம்பக்கோட்டை அரசு பள்ளியில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
தாயில்பட்டி,
வெம்பக்கோட்டை ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மருத்துவ மதிப்பீட்டு முகாம் சார்பில் வெம்பக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் மாற்றுத்திறனாளி மாணவ- மாணவிகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமிற்கு பயிற்றுனர் ஜெய்சங்கர் தலைமை தாங்கினார். பால் பாண்டியன் முன்னிலை வகித்தார். கல்லமநாயக்கன்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய கண் மருத்துவர் பவுன்ராஜ், மனநல மருத்துவர்கள், செவித்திறன் அலுவலர்கள், மாணவ-மாணவிகளுக்கு சிகிச்சை அளித்தனர். இதில் 150 பேர் கலந்து கொண்டனர்.