சிறுமியை கடத்திய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது

சிறுமியை கடத்திய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-04-01 19:21 GMT
லால்குடி,ஏப்.2-
பெரம்பலூர் மாவட்டம் நெடுவாசல் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தன். இவரது மகன் அஜித்குமார் (வயது 22). இவர் திருச்சி மாவட்டம் லால்குடி பகுதியை சேர்ந்த ஒரு சிறுமியை திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி கடத்திச் சென்றதாக கூறப்படுகிறது. இது குறித்து சிறுமியின் தந்தை கொடுத்த புகாரின் பேரில் லால்குடி அனைத்து மகளிர் போலீசார் அஜித்குமாரிடம் இருந்து சிறுமியை மீட்டனர். பின்னர் இது தொடர்பாக போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அஜித்குமாரை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்