தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை
சிவகாசியில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.;
சிவகாசி,
சிவகாசி அம்மன்கோவில்பட்டி நடுத்தெருவை சேர்ந்தவர் காளிதாஸ் (வயது 39). இவருக்கு சரளாமேரி என்ற மனைவியும், ராஜேஷ், விஸ்வா என்ற 2 மகன்களும் உள்ளனர். இந்தநிலையில் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் சம்பவத்தன்று காளிதாஸ் தன்னுடைய வீட்டில் யாரும் இல்லாத போது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது சகோதரர் கருப்பசாமி சிவகாசி கிழக்கு போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.