விருதுநகர் ராமர் கோவிலில் பிரம்மோற்சவ திருவிழா
விருதுநகர் ராமர் கோவிலில் பிரம்மோற்சவ திருவிழா ெகாடியேற்றத்துடன் தொடங்கியது.
விருதுநகர்,
விருதுநகர் ராமர் கோவிலில் ராமநவமி பிரம்மோற்சவ திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து கொடிமரத்திற்கு தீபாராதனை நடைபெற்றது. கொடியேற்றத்தை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த சுவாமியை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். விழாவையொட்டி தினமும் கஜ வாகனம், சேஷ வாகனம், அனுமந்த வாகனம், அன்ன வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சுவாமி எழுந்தருள்கின்றனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாண வைபவம் வருகிற 11-ந் தேதி நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.