பஸ் நிலையம் பகுதியில் பட்டாசு வெடித்த 9 பேர் மீது வழக்கு

பரமக்குடி பஸ் நிலையம் பகுதியில் பட்டாசு வெடித்த 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

Update: 2022-04-01 19:08 GMT
பரமக்குடி, 

சுப்ரீம் கோர்ட்டில் வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு ரத்து செய்ததை தொடர்ந்து பரமக்குடி பஸ் நிலையம் பகுதியில் மறத்தமிழர் சேனை அமைப்பின் தலைவர் புதுமலர் பிரபாகரன், பார்வர்ட் பிளாக் கட்சியின் சிவகங்கை மாவட்ட செயலாளர் யோகநாதன், கமுதக்குடி பாலமுரளி, சுனாமி சேதுபதி உள்ளிட்ட 9 பேர் பட்டாசு வெடித்து போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தி உள்ளனர் இதுபற்றிய தகவல் அறிந்ததும் பரமக்குடி நகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கருணாநிதி தலைமையில் போலீசார் அங்கு சென்று அவர்களை கலைத்து விட்டு அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மேலும் செய்திகள்