பாறைகளை வெடி வைத்து தகர்ப்பதால் வீடுகளில் அதிர்வு

கழிவுநீர் தொட்டி கட்டுவதற்காக பாறைகளை வெடி வைத்து தகர்ப்பதால் வீடுகளில் அதிர்வு ஏற்பட்டு வருகிறது என பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

Update: 2022-04-01 19:07 GMT
திருவெறும்பூர்,ஏப்.2-
கழிவுநீர் தொட்டி கட்டுவதற்காக பாறைகளை வெடி வைத்து தகர்ப்பதால் வீடுகளில் அதிர்வு ஏற்பட்டு வருகிறது என பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
கழிவுநீர் தொட்டி
திருவெறும்பூர் அருகே உள்ள  பகவதிபுரம் நடுநிலைப்பள்ளி மற்றும் தமிழ்நாடு வடிகால் வாரிய நீர்தேக்கத் தொட்டி அருகே மாநகராட்சி சார்பில் கழிவுநீர்தொட்டி அமைக்கப்பட்டு வருகிறது. இதற்காக இதற்காக பொக்லைன் எந்திரம் மூலம் பள்ளம் தோண்டும் பணி நடைபெற்றது.
அப்போது, பாறைகள் தென்பட்டதால், அதனை வெடி வைத்து தகர்க்கும் பணியில் கடந்த சில நாட்களாக ஈடுபட்டு வருகின்றனர். அங்கு வெடிவைப்பதால் அருகே உள்ள பகவதிபுரம் நடுநிலைப்பள்ளி மற்றும் ெரயில்வே பாலம், தேசிய நெடுஞ்சாலை பாலம், மேலும் அங்குள்ள 14 லட்சம் கொள்ளளவு கொண்ட நீர்த்தேக்க தொட்டி அதிர்ந்து வருகிறது.
வீடுகளில் அதிர்வு
 மேலும்  இரவு நேரங்களில் வெடிவைத்து தகர்க்கும் போது அருகே உள்ள வீடுகளில்அதிர்வு ஏற்பட்டு வருகிறது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்து வருகின்றனர். அதுமட்டுமின்றி வெடி வைப்பதால் ஏற்படும் புகையால் சிரமப்பட்டு வருவதாகவும் குற்றம்சாட்டி உள்ளனர். எனவே மாநகராட்சி அதிகாரிகள் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்