ஆர்ப்பாட்டம்

சிவகங்கையில் வருவாய்த்துறை நியமன அலுவலர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2022-04-01 18:59 GMT
சிவகங்கை, 

தமிழ்நாடு வருவாய்த்துறை குரூப்-2 நேரடி நியமன அலுவலர் சங்கத்தின் சிவகங்கை மாவட்ட கிளை சார்பில் பழைய ஓய்வூதிய திட்டத்தினை மீண்டும் அமல்படுத்த வேண்டும்.சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி துணை வட்டாட்சியர் பட்டியல்களை மறு ஆய்வு செய்து திருத்திய துணை வட்டாட்சியர் பட்டியலை வெளியிட வேண்டும் என்பது உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சிவகங்கை கலெக்டர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட தலைவர் நாகேந்திர முருகன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் வினோத்குமார் வரவேற்று பேசினார். ஆர்ப்பாட்டத்தில் மாநில பொதுச்செயலாளர் தர்மராஜ், மாவட்ட பொருளாளர் மெகரலி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பூங்கோதை நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்