வீட்டை வாடகைக்கு கொடுத்து பெண்ணிடம் ரூ.1¼ லட்சம் மோசடி

திருவெறும்பூர்,ஏப்.2-
திருவெறும்பூரை அடுத்த நவல்பட்டு அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜி. இவரது மனைவி சாரதா (வயது 36). இந்த நிலையில் இவரிடம் அதே பகுதியை சேர்ந்த அலெக்சாண்டர் (64) என்பவர்அண்ணாநகரில் தங்களுக்கு ஒரு வீடு உள்ளதாகவும், அந்த வீடு காலியாக உள்ளது என்றும், அந்த வீட்டுக்கு நீங்கள் வாடகைக்கு வருவதென்றால் வரலாம் என்றும் கூறியுள்ளார். அந்த வீட்டுக்கு செல்ல எண்ணிய சாரதா ஒரு லட்சத்து 32 ஆயிரம் ரூபாய் முன்பணமாக கொடுத்து குடியேறி உள்ளனர். இந்நிலையில் ஒரு வங்கி அதிகாரிகள் இந்த வீட்டை நாங்கள் ஜப்தி செய்யபோகிறோம். நீங்கள் வெளியேற வேண்டும் என்று கூறியுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த சாரதா இது பற்றி அலெக்சாண்டரிடம் கேட்டபோது, எந்த பதிலும் சொல்லவில்லை.மேலும்முன்பணத்தையும் கொடுக்கவில்லையாம். இதனால் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சாரதா இது குறித்து நவல்பட்டு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அலெக்சாண்டரை கைது செய்தனர்.