இண்டூர் அருகே சரக்கு வேன் மோதி வாலிபர் சாவு

இண்டூர் அருகே சரக்கு வேன் மோதி வாலிபர் இறந்தார்.

Update: 2022-04-01 18:20 GMT
பாப்பாரப்பட்டி:
தர்மபுரி மாவட்டம் இண்டூர் அருகே உள்ள ராஜாகொல்லஅள்ளி கிராமத்தை சேர்ந்தவர் வடிவேல். இவரது மகன் பாலமுருகன் (வயது 22). பட்டதாரியான இவர் போட்டி தேர்வுக்கு பயிற்சிக்கு சென்று வந்தார். நேற்று முன்தினம் இரவு பாலமுருகன் மோட்டார் சைக்கிளில் தர்மபுரி நோக்கி சென்று கொண்டிருந்தார். பூட்டுக்காரன்தோப்பு அருகே சென்றபோது எதிரே தர்மபுரியில் இருந்து இண்டூர் நோக்கி வந்த சரக்கு வேன் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில்  தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த பாலமுருகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்ததும் இண்டூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து இண்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்