ஒகேனக்கல்லில் சாலையை கடந்து சென்ற காட்டு யானை
ஒகேனக்கல்லில் சாலையை காட்டு யானை கடந்து சென்றது.
பென்னாகரம்:
கர்நாடக மாநிலத்தில் இருந்து 20-க்கும் மேற்பட்ட யானைகள் தண்ணீர், உணவு தேடி கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி வழியாக ஒகேனக்கல் வனப்பகுதிக்கு வந்துள்ளன. இந்த யானைகள் ராசிகுட்டை, சின்னாறு வனப்பகுதிகளில் முகாமிட்டு உள்ளன. யானைகள் கூட்டத்தில் இருந்து பிரிந்து சென்ற ஒரு காட்டு யானை ஒகேனக்கல்லில் முண்டச்சி பள்ளம் என்ற இடத்தில் ரோட்டை கடந்து சென்றது. இதனால் அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களை ஆங்காங்கே நிறுத்தினர். நீண்ட நேரத்திற்கு பிறகு அந்த காட்டு யானை வனப்பகுதிக்கு சென்றது. அதன்பிறகு வாகன ஓட்டிகள் சென்றனர். சாலையில் காட்டுயானை ஒய்யாரமாக நடந்து சென்றது வாகன ஓட்டிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.