ஏரியூர் அருகே முத்தையன்சாமி கோவிலில் அமாவாசை வழிபாடு

ஏரியூர் அருகே முத்தையன்சாமி கோவிலில் அமாவாசை வழிபாடு நடந்தது.

Update: 2022-04-01 18:20 GMT
ஏரியூர்:
ஏரியூர் அருகே நாகமரை ஊராட்சிக்கு உட்பட்ட வனப்பகுதியில் உள்ளது முத்தையன்சாமி கோவில். இந்த கோவிலில் அமாவாசை நாட்களில் தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் தரிசனம் செய்வது வழக்கம். அந்த வகையில் அமாவாசையையொட்டி முத்தையன்சாமி கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் தர்மபுரி மாவட்டம் மட்டும் அல்லாமல் சேலம் மாவட்டம் மேச்சேரி, மேட்டூர், கொளத்தூர், கோட்டையூர், பண்ணவாடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பரிசலில் காவிரி நீர்த்தேக்கத்தை கடந்து ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தனர். மேலும் ஏராளமான பொதுமக்கள், மொட்டை அடித்தும், பொங்கல் வைத்தும், சாமி ஊர்வலத்தின் போது குறுக்கே படுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர். குழந்தை வரம் வேண்டி குழந்தை பெற்றவர்கள், குழந்தைகளின் எடைக்கு எடை காசு செலுத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

மேலும் செய்திகள்