புதுப்பேட்டை அருகே விவசாயி விஷம் குடித்து தற்கொலை
புதுப்பேட்டை அருகே விவசாயி விஷம் குடித்து தற்கொலை
புதுப்பேட்டை
புதுப்பேட்டை அருகே உள்ள பனப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 50). விவசாயி. இவருக்கும், அவரது மனைவி அலமேலுக்கும் இடையே குடும்ப பிரச்சினை உள்ளது.
சம்பவத்தன்று மீண்டும் தகராறு ஏற்பட்டதால் மனமுடைந்த ராஜேந்திரன் விஷத்தை எடுத்து குடித்தார். இதையடுத்து சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட அவர் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து புதுப்பேட்டை போலீசில் அலமேலு கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.